தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கீழ்கண்ட இளநிலை மற்றும் முதுநிலைப் பாடபிரிவுகள் செயல்பட்டு வருகிறது.
வ.எண் |
பாடப்பிரிவுகள் |
1. |
இளங்கலை தமிழ் (B.A.,TAMIL) |
2. |
முதுகலை தமிழ் (M.A.,TAMIL) |
3. |
இளங்கலை ஆங்கிலம் (B.A., ENGLISH) |
4. |
முதுகலை ஆங்கிலம் (M.A., ENGLISH) |
5. |
இளங்கலை சமூகவியல் (B.A., SOCIALOGY) |
6. |
இளநிலை வணிகவியல் (B.Com., COMMERCE) |
7. |
இளம் அறிவியல் - கணிதவியல் (B.Sc., MATHEMATICS) |
8. |
முது அறிவியல் - கணிதவியல் (M.Sc., MATHEMATICS) |
9. |
இளம் அறிவியல் - கணினி அறிவியல்
(B.Sc., COMPUTER SCIENCE) |
10. |
முது அறிவியல் - கணினி அறிவியல்
(M.Sc., COMPUTER SCIENCE) |
11. |
இளநிலை அறிவியல் - இயற்பியல் (B.SC.,
PHYSICS) |
எனவே, மேற்கண்ட விவரங்களின்படி பழங்குடியின
மாணவியர்கள் அனைத்து வசதிகளுடன், பாதுகாப்புடனும் அரசு
ஆணையின்படி புதியதாக ஆரம்பிக்கப்படவுள்ள விடுதியை
பயன்டுத்தி மேற்படிப்பு தொடர அறிவுறுத்தப்படுகிறது. கல்லூரி புதிய
விடுதியின் சேர்க்கை விண்ணப்பங்கள் 22.05.2023 முதல் அலுவலக வேலை
நாட்களில் கீழ்கண்ட அலுவலகங்களில் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விண்ணப்பங்கள் பெற்றுகொள்ளும் அலுவலகங்கள்
விவரம்
1. |
முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி மாவட்டம்-636 905 Phone: 04346-222212 |
2. |
தனி வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலம்),
வட்டாட்சியர் அலுவலக வளாகம், பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம்-636 905. |
3. |
திட்ட அலுவலர் (பழங்குடியினர் நலம்), மாவட்ட பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், தருமபுரி -636
705. |
என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.