தொண்டை அறுவை மருத்துவம் செய்து கொண்ட பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி பா.ம.க கௌரவத் தலைவர் அவர்களை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் சந்தித்து நலம் விசாரித்தார், பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவத் தலைவர் ஜி.கே.மணி அவர்களுக்கு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தொண்டை அறுவை மருத்துவம் செய்யப்பட்டது.
அறுவை மருத்துவத்திற்கு பிறகு ஓய்வெடுத்து வரும் அவரை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிகழ்வில் அவரது மகன் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் உள்ளிட்ட குடும்பத்தினர் உடன் உள்ளனர்.