HPCL Salem Retail Regional Office -இன் கீழ் இயங்கும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய 05 மாவட்டங்களில் Retail Outlet Dealers பணிக்கு ஆட்தேர்வு நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் படைவீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் Combined Category 1 (“CC1”) எனக் குறிப்பிட்டிருக்கும் பிரிவுகளில் தகுதியான முன்னாள் படைவீரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி : 10th Std, இணையதள முகவரி : www.petrolpumpdealerchayan.in, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 27.09.2023. இது தொடர்பான அனைத்து விவரங்களும் தெரிந்து கொள்ள உரிய Guidelines Web site: www.hindustanpetroleum.com or petrolpumpdealerchavan.in மூலம் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தொலைபேசி எண்.9487179400 மூலம் தொடர்பு கொண்டும் விவரம் பெறலாம்.
எனவே தருமபுரி மாவட்டத்தை சார்ந்த தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறும், விண்ணப்பித்திருப்பின் அதன் விவரத்தினை தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.