Type Here to Get Search Results !

பணித்தள பொறுப்பாளர் பணியை உறவினருக்கு வழங்கியுள்ளார், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது பெண் புகார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகேவுள்ள ஏ. முருக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நாகசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவரது மனைவி செல்வி என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தி்ல் புகார் மனு ஒன்றினை அளித்திருக்கிறார். 


அந்த மனுவில் ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளராக பணியாற்றி வந்ததாகவும், இருபது நாட்கள் மட்டுமே பணி செய்த தன்னை அந்த பணியலிருந்து கடந்த 15ம் தேதி தன்னை பணித்தள பொறுப்பாளர் பணியிலிருந்து நீக்கிவிட்டு ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கோவிந்தசாமி, தனது சுய லாபத்திற்காக அவரது உறவினரான முருகம்மாள் என்பவரை பணித்தள பொறுப்பாளராக பணியில் அமர்த்தியிருப்பதாகவும், சரியாக பணி செய்து தான் பாதிப்புக்குள்ளாகியுள்ளதால், இது தொடர்பாக உரிய விசாரணை செய்து தனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies