மொரப்பூர், மே. 01:
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் போளையம்பள்ளி கிராமத்தில் செயல்பட்டு வரும் சாஹிப் இலவச பயிற்சி மையம் சார்பில் மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வலர்களுக்கு தொல்லியல் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. நிறுவனத் தலைவர் கார்த்திக் தீபிகா தலைமையில் நடைபெற்ற இந்த சுற்றுலாவில் சுமார் 62 பேர் பங்கேற்றனர். மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த சுற்றுலா ஏப்ரல் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
சுற்றுலா பயணத்தின் போது மதுரை கள்ளழகர் கோவில், பழமுதிர்சோலை முருகன் கோவில், குற்றாலம் நீர்வீழ்ச்சி, கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், விவேகானந்தர் பாறை, பத்மநாபபுரம் அரண்மனை, பூவாறு படகு சுற்றுலா உள்ளிட்ட வரலாற்று மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மாணவர்கள் பார்வையிட்டு அதன் சிறப்புகளை அறிந்தனர்.
இந்த பயிற்சி மையம் 2022 ஆம் ஆண்டு முதல் மாணவர்களின் அறிவு வளர்ச்சியை முன்னிட்டு புத்தகத் திருவிழா, சொற்பொழிவு, பண்பாட்டு நிகழ்ச்சிகள், திறன் போட்டிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இத்தகைய தொல்லியல் சுற்றுலா மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் தங்கள் குழந்தைகளையும் இத்தகைய பயணங்களில் கலந்து கொள்ளச் செய்வதற்கான ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)