பாலக்கோடு, மே. 01:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அண்ணா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணிஓய்வு பெற்ற 10 ஆசிரியர்களுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. தமிழக ஆரம்பப்பள்ளி கூட்டணி சார்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு வட்டார தலைவர் கோவிந்தராஜ் தலைமையேற்றார். இதில் தலைமை ஆசிரியர்கள் சாந்தி, முனியப்பன், மலர்விழி, மணிமேகலை, நிர்மலாராணி, செந்தில்குமரன், பொன்முடி மற்றும் ஆசிரியர்கள் சிவபாக்கியம், கீதா, ரத்தினவேல் ஆகியோர் பணி நிறைவு பெற்றதையடுத்து பாராட்டப்பட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பெஞ்சமின், மாவட்ட செயலாளர் பழனியப்பன், மாவட்ட பொருளாளர் ராஜா, வட்டார துணைச் செயலாளர் வாசு, வட்டார மகளிர் அணி செயலாளர் மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் மற்றும் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் கலந்து கொண்டு, பணியை நேர்மையாக நிறைவேற்றி ஓய்வு பெறும் ஆசிரியர்களை பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். வட்டார கல்வி அலுவலர் ஜீவா நன்றி உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டணி நிர்வாகிகள் தெய்வம், நாராயணன் உள்ளிட்டோர், சக ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)