Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் இந்து முன்னனி கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நடைப்பெற்றது.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் அருகே இந்து முன்னனி கொள்கை விளக்க பொதுக் கூட்டம் இந்து முன்னனி மாவட்ட செயலாளர் வேடியப்பன் தலைமையில்  நடைப்பெற்றது. ஒன்றிய செயலாளர்கள்  கூட்டத்திற்க்கு மணிகண்டன், முனியப்பன், ஒன்றிய தலைவர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் சிறப்புரையாளர்களாக மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாநில செயலாளர் சண்முகம், சேலம் கோட்ட செயலாளர் உமேஷ், மாவட்ட அமைப்பாளர் ராஜ், மாவட்ட பொது செயலாளர் சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டு இந்து முன்னனி ஏன் எதற்க்கு ? இந்து முன்னனியின் சாதனைகள், சொந்த நாட்டிலேயே இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும்.


பாரதம் முழுவதும் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும், பசுவதை தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என சிறப்புரை ஆற்றினர். முடிவில்  ஒன்றிய செயற்குழு உறுப்பிணர் ரவி நன்றி தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies