தருமபுரி, மே.02:
தருமபுரி மாவட்டத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மே தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் விழா நடைபெற்றது. இலளிகம் கிளை சார்பில் தியாகி ஆர்.பி. நினைவு இல்லம் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெ. பிரதாபன் கொடியேற்றி மே தின உரையாற்றினார்.
இந்த விழாவிற்கு கிளைச் செயலாளர் எல்.சி. கிருஷ்ணன் இணைந்து தலைமை வகித்தார். கிளை துணைச் செயலாளர் ஈ. அலமேலு மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் ஜெ. காளியம்மாள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் விஜயா, லட்சுமி, காளியம்மாள், ஜெயவேணி, செ. லட்சுமி உள்ளிட்டோர் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)