அரூர், மே.02:
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே தீர்த்தமலை பகுதியைச் சேர்ந்த பொய்பட்டி கிராமத்தில் பலத்த சூறாவளி காற்றால் வீடு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த திருமால் செல்வன் (55), அவரது தாய் வேடியம்மாள் (80), மனைவி கலைவாணி (40) ஆகியோர் வீட்டில் இருந்தபோது வீசிய கடும் காற்றின் தாக்கத்தில், அவர்கள் வசித்து வந்த குடியிருப்பு வீடு முழுமையாக சேதமடைந்தது.
திருமால் செல்வன் கடந்த 10 ஆண்டுகளாக 90 சதவீதம் உடல் ஊனமுற்ற நிலையில் இருப்பதால், குடும்பம் ஏற்கனவே பொருளாதார சிரமத்தில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது வீடு சேதமடைந்ததால் தங்குமிடம் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனடி நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)