தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைவாணி, ரவி மற்றும் ஊராட்சித் தலைவர், மன்ற பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் திருமதி.சாந்தி, ஐ.ஏ.எஸ்., அவர்கள் தலைமையில் காரிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொம்மஹள்ளி ஊராட்சியில் நடைபெற்ற சுதந்திர தினவிழா கிராம சபா கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய தலைப்புகளில் ஐந்தாவது வரிசையில் குறிப்பிட்ட அயோடின் உப்பு அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்ந்து உணவு பாதுகாப்பு துறை சார்பாக மாவட்ட நியமன அலுவலர் அவர்கள் வழிகாட்டல் படி, அயோடின் உப்பு அவசியம் குறித்து காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர், கே.நந்தகோபால் அயோடின் உப்பு, அயோடின் இல்லாத உப்பு வேறுபாடு நேரடி செயல் விளக்கம் மற்றும் அயோடின் சத்து குறைவினால் எற்படும் இடர்பாடுகளான மூளை வளர்ச்சி குறைவு, நினைவாற்றல் மங்குதல், கண் பார்வை கோளாறுகள், முன் கழுத்து கழலை, கருசிதைவு, வளர்ச்சிதை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு உபாதைகளுக்கு அயோடின் பற்றாக்குறை காரணம் அதனை தவிர்க்க அயோடின் செறிவூட்டப்பட்ட உப்பினை பயன்படுத்துவது அவசியம் என்றும் அயோடின் உப்பு திறந்த நிலையில் உபயோகப்படுத்தக் கூடாது. மூடி இட்ட பீங்கான் அல்லது புட் கிரேடு கன்டெயினர்களில் முறையாக பயன்படுத்த வேண்டும் என எடுத்துரைத்து அயோடின் உப்பு அவசியம் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.
நிகழ்வில் தாசில்தார் ரமேஷ், ஊராட்சி தலைவர் தீர்த்தகிரி, வேளாண்மை துறை அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர் அனுராதா, ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள், மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள், மகளிர் குழுக்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.