சுதந்திர தினத்தினையொட்டி தருமபுரி அடுத்த உங்கரான அள்ளி கிராமத்தில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் முன்னாள் இராணவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் சுதந்திர தின விழாவினை கொண்டாடி மகிழ்ந்தனர்.
முன்னாள் தரை, கப்பல் மற்றும் விண் படை வீரர்கள் சங்கம் சார்பில், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தது. கேப்டன் நாகராஜன் தலமை தாங்க, சங்க துணை செயலாளர் மாதன், முருகன், முனுசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க மாநில பொதுச்செயலாளர் jwo கிருஷ்ண மூர்த்தி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். வேப்பாடி எம். ஆறுமுகம் கருத்துரை வழங்கினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக, முன்னாள் பிரிகேடியர் சிவராமன் அவா்கள் கலந்து கொண்டு, முன்னாள் ராணுவ வீரர்கள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், இந்திய நாட்டின் ஒற்றுமைக்காக அனைவரும் பாடுபட வேண்டும் என்றும், இந்தியாவை இன்னும் வலிமையான இந்தியாவாக மாற்றிட இளைஞ்ர்கள் முன் வர வேண்டும், நாட்டில் பல்வேறு மாநிலங்கள் இருந்தாலும் கூட ஒரே தேசம் என ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என குறிப்பிட்டு பேசினார்.
விழாவின் இறுதியில் தருமபுரியில் முன்னாள் படை வீரர்களுக்கென மருத்துவ மனைக்கான இடம் வேண்டும், இதே போல கேன்டீனுக்கு சொந்த இடம் வழங்க வேண்டும், முன்னாள் படை வீரர்கள் தங்கி ஓய்வெடுக்க தங்கும் விடுதி வேண்டுமெனவும், முன்னாள் படை வீரர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் கலந்து கொண்டு குறைகளை கேட்டறிய வேண்டுமெனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. நன்றியுரை கேப்டன் நாகராஜன் வழங்கி விழாவினை நிறைவு செய்தனர்.