Type Here to Get Search Results !

பேவுஅள்ளியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கனிமவள நிதியை பெற்று தராவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்ட நடத்த போவாதாக தீர்மானம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட பேவுஅள்ளி ஊராட்சியில் 12வார்டுகளில் 3 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட  குடும்பத்தில் 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் சீரியம்பட்டி முனியப்பன் கோயில் வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் தலைமையில் நடைப்பெற்றது.


இக்கூட்டத்தில் பேசிய கிராம மக்கள் கரடிகுண்டு பகுதியானது பேவு அள்ளி ஊராட்சியை சேர்ந்தது, இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு  குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் பேவுஅள்ளி ஊராட்சி மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அப்பகுதியில் இயங்கி வரும் கல்குவாரி மூலம் பெறப்படும் கனிமவள நிதி அணைத்தும் நல்லூர் ஊராட்சிக்கு செல்லுவதாகவும், இதனை உடனே தடுத்து நிறுத்தி பேவுஅள்ளி ஊராட்சி நிதி ஆதாயம் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர். மேலும் இது குறித்து கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற துணைத் தலைவர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற செயலாலர் பவுன்ராஜ் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies