77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 13/8/23 ஞாயிற்றுக்கிழமை காலை 10மணிமுதல் 2மணிவரை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி கிளை மற்றும் அரசு மருத்துவமனை இனணந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாமில் சிறப்பு விருந்தினராக Dr.R.அருண், T.S.லதா காவல் ஆய்வாளர் கலந்துகொண்டனர்.
TNTJ மாவட்ட மருத்துவரணி செயலாளர் தங்கம்சமியுலாஹ் தலைமையேற்று இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அது சமயம் கிளைத்தலைவர் அப்துல் ஹமீது, செயலாளர் அபுபக்கர் சித்தீக், பொருளாளர் அஷ்ரப் அலி ஆரிப் மற்றும் ஜமாத்தின் தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டு மிகவும் சிறப்பான முறையில் 90units ரத்தம் தானமாக வழங்கினர்.
இறுதியாக ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ்வைத்தவர் போலாவார் என்று திருக்குர்ஆனில் குறிப்பிட்டது போல் இந்த சேவையை TNTJ கடந்த 15 வருடங்களாக செய்து வருவதை நினைவுறுத்தி கிளைத்தலைவர் நன்றியினை தெரிவித்தார்.