பாலக்கோடு, ஜூலை 7 (ஆனி 23, சுபகிருது) –
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகரம் எம்.ஜி. ரோட்டில், வேலன் மொபைல் ஷோரூம் புதியதாக திறக்கப்பட்டு, ஜூலை 8ஆம் தேதி காலை நடைபெற்ற விழாவில் பலர் கலந்து கொண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்த நிகழ்வு பாஜக மாவட்ட நலத்திட்ட பிரிவு துணைத் தலைவர் பி.கே. சிவா தலைமையில் நடைபெற்றது. ஷோரூம் உரிமையாளர் ஜெகதீஷ் வரவேற்பு கூறினார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்தன் பங்கேற்று, ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி ஷோரூமை திறந்து வைத்தார். தொடர்ந்து வணிகர் சங்கத் தலைவர் முத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பல அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள், காவல்துறை அதிகாரிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள், சமூக நல செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். பொதுமக்களும் அதிகளவில் பங்கேற்று, புதிய ஷோரூமுக்கு வாழ்த்து தெரிவித்தனர். விழாவின் முடிவில், ஷோரூம் உரிமையாளர் விஜி, நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்திய அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார். இந்த புதிய வணிக நிறுவனம், பாலக்கோடு மக்களுக்கு தரமான மொபைல் சேவைகளை வழங்கும் என்ற நம்பிக்கையில் திறக்கப்பட்டுள்ளது.