காரிமங்கலத்தில் புதியதாக மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் தருமபுரி மாவட்ட முதன்மை நீதிபதி திரு. A.மணிமொழி நீதிமன்றத்தை திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி. K.சாந்தி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுதாஸ் அவர்களும் குத்துவிளக்கு ஏற்றியும் விழாவினை சிறப்பித்தார்கள்.

இதில் பாலக்கோடு வழக்கறிஞர் சங்க தலைவர் P. குப்பன் அவர்களும், காரிமங்கலம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் அரிமா.C.பெரியசாமி, செயலாளர் P.ரஞ்சித்குமார், பொருளாளர் K.G.மகேஷ்குமார், துணை தலைவர் L.வேல்முருகன் இணை செயலாளர் V.ஜெயராமன், நூலகர் M.தங்கதுரை, செயற்குழு உறுப்பினர்கள் G.செந்தில்குமார், C. மகேஷ், M.கோகுல் மற்றும் வழக்கறிஞர்களும், நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். காரிமங்கலம் வழக்கறிஞர்கள் சார்பாக வந்திருந்த அனைவருக்கும் கதராடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.