பாலக்கோடு, ஆக 19 | ஆவணி 3 –
இந்நிலை குறித்து அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், திராவிட மாடல் அரசின் “எல்லோருக்கும் எல்லாம்” என்ற தத்துவத்தின் அடிப்படையில், ஆகஸ்ட் 17 ஆம் தேதி தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில், அக்குடும்பங்களுக்கான வீட்டு மனை பட்டாவை வழங்கி, அவர்களின் நீண்ட நாள் கனவை நனவாக்கித் தந்தார்.
மேலும், வீடு, மின்சாரம், குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகளை அக்குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்காக முதல்வருடன் இணைந்து பாடுபட்ட வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பாராளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன், திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.வி.டி. கோபால் ஆகியோருக்கு இருளர் இன மக்கள் நன்றியைத் தெரிவித்தனர்.
அதேபோல், இருளர் இன மக்களுக்கு தொடர்ந்து நலத்திட்டங்கள் கிடைக்க ஓய்வின்றி உழைத்த திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் எம்.வி.டி. கோபாலுக்கு, மக்கள் நேற்று அவரது இல்லத்தில் நேரில் சென்று சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் முனிராஜ், அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் சக்தி, முன்னாள் கவுன்சிலர் குமார், முன்னாள் வார்டு உறுப்பினர் முனிராஜ், கிளைக் கழக நிர்வாகிகள் வெங்கடேசன், மூர்த்தி, வரதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.