தர்மபுரி சேலம் நெடுஞ்சாலை தொப்பூரில் அமைந்துள்ளது வீர ஆஞ்சநேயர் கோயில். தை ஆமாவாசையை முன்னிட்டு, வீரஆஞ்சநேயர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
இதையடுத்து, வீர ஆஞ்சநேயர், வெண்ணை காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.
