தருமபுரி, ஆக.20 | ஆவணி 4 :
கூட்டத்தில் பேசுகையில் ஆட்சியர்,
-
களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளையே தயாரிக்க வேண்டும்,
-
சிலைகளுக்கு இரசாயன நிறங்கள் பூசக்கூடாது,
-
பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது,
-
வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், சிலைகள் நிறுவ தடையின்மை சான்றிதழ் பெற வருவாய் கோட்டாட்சியரிடம் முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும் என்றும், ஊர்வலத்தின் போது காவல்துறை மற்றும் வருவாய்துறை இணைந்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிலைகளை கரைக்கும் போது மாசு கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகரித்த நீர்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும்; இரசாயன நிறம் பூசப்பட்ட சிலைகளை கரைக்க அனுமதி இல்லை என்றும் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். கவிதா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர்கள் இரா. காயத்ரி (தருமபுரி), சின்னுசாமி (அரூர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.