தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பேரூராட்சிகள் துறை செயற்பொறியாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பென்னாகரம் பேரூராட்சியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த பேருந்து நிலையம் அகற்றப்பட்டு மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்ட ஒப்பந்தம் விடப்பட்டு, தற்பொழுது புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த கட்டுமான பணிகளை பேரூராட்சிகள் துறை செயற்பொறியாளர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார், பின்னர் போடூர் ரோடு பகுதியில் கட்டப்பட்டு வரும் குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இந்தியன் வங்கி வரையில் கழிவுநீர் வாய்க்கால் அமைப்பது தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது பேரூராட்சிகள் துறை உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி கீதா, பேரூராட்சி தலைவர் வீரமணி, பேரூராட்சி துணைத் தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள் பவுனேசன், முரளி மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.