தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் அருகே உள்ள மெணசியில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளிடம் ஏமாற்றிய 300 கோடிரூபாயை திருப்பி தர வேண்டும் இல்லையெனில் அந்த ஆலையை அரசே ஏற்று வங்கி கடனை கட்ட வேண்டும் கோரி 55க்கும் மேலான நாட்கள் காத்திருக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது இதில் தமிழக அரசு தலையிட்டு உடனடியாக விவசாயிகளை ஏமாற்றிய ஆளை நிர்வாகத்திடம் பணத்தை திரும்ப பெற்ற தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மேலும் கரும்பு டன் ஒன்றுக்கு 4000 வழங்க வேண்டும் விவசாய பொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து கரும்பு விவசாயிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்பாட்டம் கோபாலபுரம் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வஞ்சி தலைமையில் நடைபெற்றது.
அவருடன் சண்முகம் தீர்த்தகிரி ராஜசேகர் அர்ச்சுனன் பொன்னுசாமி மனோகரன் வெங்கடாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.