தருமபுரி மாவட்டத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சி குறித்து வெளி மாவட்ட பாமக நிர்வாகிகள் ஒரே நேரத்தில் மாவட்டம் முழுவதும் கட்சியின் அனைத்து ஒன்றியங்கள் வாரியாக அனைத்து கிராமங்களுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றன. கிளை புதுப்பித்தல், வாக்குச்சாவடி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்தல், கிளை கூட்டம் போன்ற பணிகள் நடைபெற்றன.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், இண்டூரில் நடைபெற்ற கிளை கூட்ட நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி, சட்டமன்ற உறுப்பினர்கள் – எஸ்.பி.வெங்கடேஷ்வரன், இரா.அருள், தேர்தல் பணிக்குழு மாநில செயலாளர் மீ.கா.செல்வகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கூட்டத்தின் நோக்கம், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசினர்.
இந்நிகழ்ச்சியில், மாநில துணைத் தலைவர் பி.சாந்தமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கமலேசன், ஒன்றிய செயலாளர் பெ.சக்தி, ஒன்றிய தலைவர் முருகன், நிர்வாகிகள் – கிருஷ்ணன், செல்வராஜ், மாயகண்ணன், பெரியண்ணன், மாது, வஜ்ஜிரமணி, வீரமணி, சந்துரு, காந்திராஜ், சக்திவேல் மற்றும் கிளை நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.