தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் கிராமத்தில் மயிலை மலை மலை மீது அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் கோவிலின் அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அமிர்தேஸ்வரர், அன்னை ஸ்ரீ அமிர்தாம்பிகை கோவிலில், ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ அமிர்தேஸ்வரர்க்கு அன்னாபிஷேக விழா நடைபெற்றது.

ஸ்ரீ அமிர்தேஸ்வரர், அன்னை ஸ்ரீ அமிர்தாம்பிகைக்கு அபிஷேகம், மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 700க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரு கிலோமீட்டர் மயிலை மலையைசுற்றி மேளதாளத்துடன் கிரிவலம் சென்று ஸ்ரீ அமிர்தேஸ்வரர், அன்னை ஸ்ரீ அமிர்தாம்பிகை தரிசனம் செய்து வழிபட்டனர்.விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.