பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசனம் மற்றும் அதன் பராமரிப்பு குறித்த உள் மாவட்ட அளவிலான பட்டறிவு பயணமாக மொரப்பூர் வட்டாரம் அண்ணாமலை பட்டியில் செயல்படும் ஸ்ரீ நாராயண சுவாமி நாயுடு துல்லிய பண்ணை விவசாயிகள் குழு விற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்,
அங்கு அக்குழு முன்னோடி விவசாயி தேவேந்திரன் மற்றும் டால்பின் சொட்டுநீர் நிறுவனத்தின் கள அலுவலர் சந்தோஷ் ஆகியோர்கள் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு நுண்ணீர்பாசனம் பற்றியும் அதனால் உண்டாகும் நன்மைகள் குறித்தும் மற்றும் அதன் பராமரிப்பு முறைகள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தனர்ம்

மேலும் இப்பட்டறிவு பயணத்தில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன், உதவி தொழில் நுட்ப மேலாளர் சண்முகம், ஆகியோர்கள் கலந்து கொண்டு ஏற்பாடுகளை செய்து இருந்தனர், இந்நிகழ்ச்சியில் 50 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.