பாலக்கோடு, ஜூலை 11 (ஆனி 27) -
தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அடுத்த சொரகுரிக்கை கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர் சுப்ரமணி (69), இவர் கடந்த 14 வருடங்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவரிடம் 74 சென்ட் நிலத்தை விலை கொடுத்து வாங்கி தனது மனைவி பெயரில் பத்திர பதிவு செய்துள்ளார்.
இவரது நிலத்திற்க்கு அருகில் உள்ள முனிராஜ் என்பவரின் நிலத்திற்க்கு வழி கேட்டுள்ளார். வழிதராதால் முனிராஜ் முறைகேடாக தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலருக்கு பணம் கொடுத்து தனது மனைவி பெயரில் உள்ள பட்டாவை கடந்த ஆண்டு ரத்து செய்து உள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
தான் ராணுவத்தில் பணிபுரிந்து சிறுக சிறுக சேமித்த பணத்தில் நிலத்தை வாங்கியதாகவும், எந்த ஒரு நியாயமான காரணங்களும் இன்றி எனது பட்டாவை ரத்து செய்து மாவட்ட வருவாய் ஆய்வாளர் அநீதி இழைத்துள்ளதாகவும் இது குறித்து தமிழக முதல்வர் வரை புகார் அளித்துள்ளார் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சிய போக்காக செயல்படுவதாகவும், அதிகாரிகள் முறைகேடாக உடனடியாக ரத்து செய்த பட்டாவை முறைபடி மீண்டும் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாட்டிற்காக பணியாற்றிய இராணுவ வீரருக்கே இந்த அவல நிலை என்றால் சாதாரன மக்களின் நிலை என்ன என்பது ஆட்சியாளருக்கு வெளிச்சம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.