மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க திட்டத்தின் மூலம் இன்று 750 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இன்று அன்னாபிஷேகம் மற்றும் பௌர்ணமி முகூர்த்த நாள், வளைகாப்பு நிகழ்ச்சி, சுப நிகழ்ச்சி மற்றும் அன்னதானம் என 750 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. தருமபுரி இலக்கியம்பட்டி, மாட்டுக்காரனூர், தருமபுரியில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி, அன்னாபிஷேகம், தருமபுரி நெசவாளர் காலனி அதியன் உணவகம் சார்பாக மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க திட்டத்தின் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள நோயாளிகளின் பார்வையாளர்கள் 750 நபர்களுக்கு மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது. உணவு வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக மை தருமபுரி அமையினர் தெரிவி8த்தனர்.
