பாப்பிரெட்டிப்பாட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய திமுகவினர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 நவம்பர், 2022

பாப்பிரெட்டிப்பாட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய திமுகவினர்.


திமுக மாநில இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியம் சார்பில்  நல திட்டங்கள் மற்றும் இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார், பொதுமக்களுக்கும், தூய்மை பணியாளர்கள், பள்ளி மாணவ மாணவியருக்கும் நல திட்டங்கள் வழங்கப்பட்டது


பொம்மிடி பொ. மல்லாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் மற்றும் நல திட்டங்கள் வழங்கப்பட்டது, அதேபோல பையர் நத்தம் அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம், பென்சில், பேனா போன்றவை வழங்கப்பட்டது


இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நல திட்டங்களை வழங்கினார்  இதில் பொம்மிடி பொ,மல்லாபுரம் நகர செயலாளர்  கௌதமன், பொ.மல்லாபுரம் போரூராட்சி தலைவர் சாந்தி புஸ்பராஜ் கவுன்சிலர்கள் கோகுல்நாத் , ராஜாமணி, கௌசல்யா, பையர் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா குப்புசாமி, துணைத்தலைவர் சிவகாமி செல்வம், கட்சியினர் விஜயன், ராஜா, பிலிப் மற்றும் ஏராளமான திமுகவினர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.