பென்னாகரம், ஜூலை 31 | ஆடி 15 -
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக, தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, பதிவுத்துறை தலைமை ஆணையர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சேலம் பகுதி துணை பதிவுத்துறை தலைவர் சுபிதா லட்சுமி, மாவட்ட நிர்வாக பதிவாளர் வளர்மதி, மாவட்ட தணிக்கை பதிவாளர் கனகராஜ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
இந்த விழாவில் பென்னாகரம் வட்டாட்சியர் சண்முகசுந்தரம், சார் பதிவாளர் குமார், உதவியாளர் காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல், கிராம ஊராட்சி அலுவலர் லோகநாதன், பென்னாகரம் பேரூராட்சி செயலாளர் செந்தில் குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தொண்டர்களும் இதில் கலந்து கொண்டு மகிழ்ச்சி தெரிவித்தனர்.