பாலக்கோடு, ஆகஸ்ட் 01 | ஆடி 15 -
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம், புலிக்கரை கிராமத்தைச் சேர்ந்த முத்து என்ற நபர் கடந்த ஏழு ஆண்டுகளாக டீக்கடை மற்றும் மளிகை கடை நடத்தி வருகிறார். இன்று பிற்பகல் 3 மணி அளவில், கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படும் 5 பேர் கொண்ட மர்ம நபர்கள் டீக்கடையில் திடீரென புகுந்து, கடையை அடித்து உடைத்துள்ளனர். கடையில் இருந்த டிவி, டேபிள், சேர், இருசக்கர வாகனம் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டன.
இச்சம்பவம் காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை அடையாளம் கண்டு பிடிக்க தீவிரமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.