Type Here to Get Search Results !

சீரியம்பட்டியில் டிராக்டரில் இருந்து விழுந்த டிரைவரின் கால் முறிவு.


பாலக்கோடு, ஆகஸ்ட் 31 | ஆடி 15 -


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சீரியம்பட்டியில் டிராக்டர் விபத்தில் டிரைவரின் கால் முறிவு ஏற்பட்டது. பாலக்கோடு அடுத்த கர்த்தாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் முனிராஜ் (47), நேற்று தனது நண்பர் கணபதியுடன் எரு லோடு ஏற்றி பயணம் செய்தார். பெல்ரம்பட்டி பகுதியில் எருவை இறக்கிவிட்டு, அவர்கள் மீண்டும் பாலக்கோடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.


மாரண்டஅள்ளி அடுத்த சீரியம்பட்டி கூட்ரோடு அருகே சென்றபோது, திடீரென சாலையை கடந்து காட்டுப்பன்றி ஓடியது. அதனை மோதாமல் தவிர்க்க முனிராஜ் திடீரென பிரேக் அடித்ததால், டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையில் இருந்த வேகத்தடையை ஏறிய டிராக்டர் தாறுமாறாகி, முனிராஜ் கீழே விழுந்தார். அப்போது டிராக்டரின் பின்பக்க டயர் அவரை மிதித்ததில், அவரது இடது கால் தொடையில் முறிவு ஏற்பட்டது.


உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies