டாடா ஐபோன் நிறுவனத்திற்கு தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 நவம்பர், 2022

டாடா ஐபோன் நிறுவனத்திற்கு தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவங்கி இருக்கும் டாடா ஐபோன் நிறுவனத்திற்கு தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், தமிழ்நாடு ஏஐடியுசி 13வது மாவட்ட மாநாட்டில் தீர்மானம். தமிழ்நாடு ஏஐடியுசியின் 13வது மாவட்ட மாநாடு தர்மபுரி தனியார் மண்டபத்தில் ஏஐடியுசி மாவட்ட தலைவர் மாதேஸ்வரன் மற்றும் கட்டுமான மாவட்ட தலைவர் குழந்தைவேலு  தலைமையில் நடந்தது.


மாநில தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பராயன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நஞ்சப்பன் மற்றும் சிபிஐ மாநில நிர்வாக குழு உறுப்பினர் தேவராசன் ஆகியோர் மாநாடு கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினர்.


சிபிஐ மாவட்ட செயலாளர் கலைச்செல்வம், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சின்னசாமி, சிபிஐ மாநில குழு தமிழ்குமரன், இந்திய மாதர் தேசிய சம்மேளன மாவட்ட செயலாளர் கமலா மூர்த்தி, முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் கலிலுல்லா, முன்னாள் மாநில அமைப்பு செயலாளர் முனியன்,     கட்டுமான மாவட்ட செயலாளர் மணி, ரவி, பாஸ்கரன், மேனகா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.


மாநாட்டில் புதிய மின்சார திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், தேசிய பணமாக்கல் கொள்கை மூலம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, பொதுத்துறை நிறுவனங்களான வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, பிஎஸ்என்எல், விமான போக்குவரத்தை தனியாருக்கு கொடுப்பதை கைவிட வேண்டும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவங்கி இருக்கும் டாடா ஐபோன் நிறுவனத்தில் வெளி மாநில தொழிலாளர்களை சேர்ப்பதை கைவிட்டு தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு  முன்னுரிமை வழங்க வேண்டும், அரசு பணியாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும், தர்மபுரி மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி துவங்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 


வேலை அறிக்கையை மாவட்ட பொது செயலாளர் மணி, வரவு செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் முருகன் ஆகியோர் சமர்ப்பித்தனர். ஏஐடியுசி மாநில செயலாளர் ஆறுமுகம் மாநாட்டு நிறைவுரை ஆற்றினார். இறுதியில் மாவட்ட பொருளாளர் முருகன் நன்றி உரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.