Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே மினி சரக்கு லாரி தடுப்பு சுவரில் மோதியது – இருவர் பலி.


பாலக்கோடு, ஆக 03 | ஆடி 18 -
 


தருமபுரி மாவட்டம் பழைய தருமபுரியைச் சேர்ந்த மினி சரக்கு லாரி டிரைவர் கிருஷ்ணன் (40), கட்டிடப்பணிக்கு தேவையான பலகைகளை ஏற்றி ராயக்கோட்டையிலிருந்து தருமபுரி நோக்கி பயணித்தார். அவருடன் தம்பி செல்வகுமார் (25) மற்றும் கட்டிட மேஸ்திரி யாதவ் (35) பயணம் செய்தனர். பாலக்கோடு அருகே, கொம்மநாயக்கன்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, கிருஷ்ணன் ஓட்டிய மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. தாக்கத்தின் தீவிரத்தால், கிருஷ்ணன் மற்றும் யாதவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


கடுமையாக காயமடைந்த செல்வகுமாரை மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்துக்கு தொடர்பாக பாலக்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies