இருளப்பட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 30 அக்டோபர், 2022

இருளப்பட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் இருளப்பட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. செவ்வாய்கிழமை (25.10.2022) முதல் ஞாயிற்றுக் கிழமை (30.10.2022) வரை தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


கடைசி நாளான இன்று முருகப்பெருமானுக்கு பால், தயிர், திருநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், தேன், இளநீர் போன்ற அபிஷேகம் நடைபெற்றது.


விழாவின் முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இருளப்பட்டி செங்குந்த முதலியார் சமூகத்தினர் மற்றும் கிருபானந்த வாரியார் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad