சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நம் நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை நாள் கடைப்பிடிக்க படுகிறது.
தருமபுரி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அலகு-1 மற்றும் அலகு-2 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்றனர். இரண்டு அலகிலும் உள்ள அனைத்து நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் ஒற்றுமையுடனும், நேர்மையுடனும் இருப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.
இந்த நிகழ்விற்கு கல்லூரி தாளாளர் DR.திரு.கோவிந்த், கல்லூரி முதல்வர் Dr. சா. எழிலன், துணை முதல்வர் Dr. சி. தமிழரசு, நிர்வாக அலுவலர் Er. ரா.கணேஷ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் திரு. இரா. சதீஸ் குமார், திரு.பா.பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


