பாலக்கோட்டில் ஓம் ஸ்ரீ ஆறு படை சக்திவேல்முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா வெகு விமர்சையாக கொண்டாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 30 அக்டோபர், 2022

பாலக்கோட்டில் ஓம் ஸ்ரீ ஆறு படை சக்திவேல்முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா வெகு விமர்சையாக கொண்டாட்டம்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் எதிரே உள்ள முருகன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ ஆறு படை சக்திவேல்முருகன் திருக்கோவிலில் நேற்று கந்தசஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

முன்னதாக மூலவர் மற்றும் உற்சவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. உற்சவ மூர்த்திக்கு பல்வேறு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் ஓம் ஸ்ரீ ஆறுபடை சக்திவேல்முருகன் ஆறுமுகத்துடன் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.


அதனை தொடர்ந்து சூரசம்ஹாரவதம்  நடைப்பெற்றது. இதனை காண 100க்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad