பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பி.பள்ளிப்பட்டியில் இயங்கி வரும் வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் விவசாயிகளுக்கு தேவையான விதைப்பொருட்கள் உள்ளிட்ட மானியத்தில் வழங்கப்படும் பொருட்கள் குறித்து தகவல் பலகையில் தெரிவிக்க கோரிக்கை. பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட சுமார் 50 க்கும் மேற்பட்டகிராமப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயனடையும் வகையில் பி பள்ளிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகில் வேளாண்மை விரிவாக்க மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைப்பொருட்கள் மற்றும் மானிய பொருட்கள் ஆகியவை குறித்து தகவல் பலகையில் எந்த விபரமும் தெரிவிக்காத நிலையில் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பல்வேறு நேரங்களில் வந்து ஏமாந்து செல்லும் சூழ்நிலை உருவாகி வருகிறது எனவே சம்மந்தப்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகள் பயனடையும் வகையில் அந்தப் பகுதியில் உள்ள தகவல் பலகையில் தகவல்களை தெரிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக