நேரு யுவ கேந்திராவின் சார்பில் இன்று ராமாக்கள் ஏரி பகுதி தூய்மை இந்தியா இரண்டாவது கட்ட விழிப்புணர்வு முகாம்; நாடாளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 28 அக்டோபர், 2022

நேரு யுவ கேந்திராவின் சார்பில் இன்று ராமாக்கள் ஏரி பகுதி தூய்மை இந்தியா இரண்டாவது கட்ட விழிப்புணர்வு முகாம்; நாடாளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு.

தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் இன்று ராமாக்கள் ஏரி பகுதி தூய்மை இந்தியா இரண்டாவது கட்ட விழிப்புணர்வு முகாமினை தருமபுரி நகராட்சி தலைவர் திருமதி. லஷ்மி நாட்டான்மாது தலைமையில் இன்று நடைபெற்றது.


நகராட்சி துணை தலைவர் திருமதி. நித்யா  அன்பழகன், 1வது வார்டு கவுன்சிலர் தண்டபாணி ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் DNV.S செந்தில் குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூய்மை பணியினை தொடங்கி வைத்தார். 


மேலும் அவர் ஏரிப்பகுதியின் நடைப்பயிற்சி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு விழாவினை சிறப்பித்தார்.தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழியினை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு. வெங்கடேஸ்வரன் அவர்கள் வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.


நகராட்சி ஆணையர் திருமதி.சித்ரா, சுகாதார அலுவலர் ராஜரத்தினம் , பொதுப்பணித் துறை நீர் மேலாண்மை உதவி பொறியாளர் மாலதி, பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையம் மற்றும் ஆராய்ச்சி மையம் இயக்குநர் முனைவர் மோகனசுந்தரம், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் கோவிந்தராஜ், முனைவர் காமராஜ்,டான் போஸ்கோ கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சகாயம், இரண்டாவது வார்டு கவுன்சிலர் அலமேலு கணவர் சக்திவேல் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


முகாமில் 200க்கும் மேற்பட்ட கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களை தூய்மை பணியில் ஈடுபடுத்திக் கொண்டனர்.நேரு யுவ கேந்திராவின் மாவட்ட இளைஞர் அலுவலர் பிரேம் பரத் குமார் நிகழ்ச்சிக்கான நோக்கவுரை வழங்கினார்.


முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார் நிறைவாக தேசிய இளைஞர் தொண்டர் ஞானராஜ் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad