Type Here to Get Search Results !

ஓடும் காரில் திடீர் தீ, கிராம மக்கள் உதவியால் பெரும் சேதம் தவிர்ப்பு.

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ பள்ளிப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட இருளப்பட்டி கிராமத்தில் ஆம்னி கார் திடீரென தீப்பற்றி எரிந்தது, இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் வண்டியை சாலையின் ஓரத்தில் நிறுத்தியதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.

இருப்பினும் வண்டியில் உள்பகுதி எரிந்து இருக்கை, ஸ்டேரிங் மற்றும் இதர பாகங்களும் தீயில் எரிந்து நாசமானது, இதனை கன்றை அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு  தகவல் தெரிவித்தனர், தகவல் அறிந்து ஒரு மணி நேரம் கழித்து தீயணைப்பு வாகனம் வந்து சேர்ந்தது அதற்குள் அப்பகுதிபொதுமக்கள் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அனைத்து வண்டியை முழு சேதமின்றி மீட்டனர்.
மேலும் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறை தக்க சமயத்தில் வராததால் அரூர் தீயணைப்பு துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, இதனால் சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது. மேலும் தீயணைப்பதற்காக வந்த தீயணைப்புத் துறையினர் ஏற்கனவே அணைக்கப்பட்டு இருந்த வண்டியின் மீது கடமைக்காக வெறுமனே தண்ணீரை பீச்சு அடித்து விட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies