காரிமங்கலம் அருகே கால்நடைகளுக்கான சிறப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 29 அக்டோபர், 2022

காரிமங்கலம் அருகே கால்நடைகளுக்கான சிறப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த காரியமங்கலம் அருகே உள்ள பொம்மனஹள்ளி கிராமத்தில் துரைசாமி கொட்டாய் பகுதியில் கால்நடைகளுக்கான சிறப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு நடைபெற்றது.  கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. முகாமினை பொம்மனஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் தீர்த்தகிரி துவக்கி வைத்தார்.  


இதில் சுமார் 1000கும் மேற்பட்ட ஆடு, மாடு, எருமை,கோழி, நாய் போன்ற விலங்குகளுக்கு சினைப் பரிசோதனை,சினை ஊசி போடுதல், அம்மை தடுப்பூசி ஆகிய சிகிச்சைகள் வழங்கப்பட்டன. மேலும் கால்நடைகளுக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. இதில் சிறந்த கால்நடைகள் மற்றும் கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த கால்நடை வளர்ப்போருக்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. 


இதில் மருத்துவர் ஆசைத்தம்பி, அருள் மற்றும் கால்நடை ஆய்வாளர் பழனியப்பன் கால்நடை உதவி ஆய்வாளர் லட்சுமணன், நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad