தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சந்திராபுரம் கிராமத்தில் சண்முகம் (40) என்பவரின் 2 ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் பயிரிட்டிருந்தார், நேற்று காலை சண்முகம் தோட்டத்திற்க்கு சென்ற போது சுமார் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருப்பதை கண்டு உடனடியாக பாலக்கோடு வனசரகர் நடராஜ்க்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து திருமல்வாடி காப்புக் காட்டில் விட்டனர்.


