தமிழக மலைவாழ் பழங்குடியினர் இயற்கை விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவராக தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எலந்தகோட்டப்பட்டி பகுதியை சேர்ந்த ராமர் கடந்த 7 வருடங்களாக இயக்கத்தின் பணிகளை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி அன்று அதிகாலை அவர் உடல்நல குறைவால் காலமானார், இதனையடுத்து தருமபுரி மாவட்ட தலைவர் ராமருக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில தலைவர் பி.ஆர் பாண்டியன் அவர்களின் ஆலோசனை படி தமிழக மலைவாழ் பழங்குடியினர் இயற்கை விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மதூர் ராமர் தலைமையில் இன்று இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர், மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் கோபால், தருமபுரி மாவட்ட ஆலோசகர் தருமலிங்கம், சேலம் மாவட்ட பொருளாளர் லட்சுமணன், நாமக்கல் மாவட்ட செயலாளர் முத்துசாமி, அரூர் வட்டார தலைவர் ராமன், கோம்பூர் குழுத் தலைவர் ஆண்டி, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
