இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் அவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம்சுப்பிரமணிபாலக்கோடு பேரூராட்சித் தலைவர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திட்டத்தை துவக்கி வைத்து பேசிய கலெக்டர் சாந்தி:-
முதலமைச்சரின் சிறப்பு திட்டமான நாட்டிலேயே முன்னோடியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு ஊராட்சி முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட 111 அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் சுமார் 6,400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகின்றது.
அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் எனவும், இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்குவோம் எனவும், படிப்படியாக அனைத்துப் பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும், மேலும் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவதற்கு அனைத்து ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி மன்றத்தலைவர்கள், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், அப்பள்ளியின் பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர், பள்ளி மேலாண்மைக்குழு பிரதிநிதி மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கொண்ட நிர்வாக குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட அரசு வழக்கறிஞர் முருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் பாபு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மணிமேகலை, பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், ரவி, பாலக்கோடு பேரூராட்சி செயல் அலுவலர் டாரத்தி, பாலக்கோடு தாசில்தார் ராஜசேகரன், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் .பானுசுஜாதா, பாலக்கோடு ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் பிரபாகரன் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
