தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் அரூர் வேளாண்மை உழவர் நலத்துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை விரிவாக்க சீரமைப்பு திட்டம் பறையப்பட்டி புதூர் கிராமத்தில் பேட்டரி தெளிப்பான் செயல் விளக்கம் உதவி வேளாண்மை அலுவலர் திரு. ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
விவசாயிகள் பேட்டரி தெளிப்பான் கொண்டு பூச்சி மருந்து தெளிக்கும் பொழுது சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது இல்லை மேலும் பூச்சி மருந்து அடிக்கும் செலவு குறைகிறது. இதனால் வருடத்திற்கு சுமார் 3000 முதல் 5000 வரை உற்பத்தி செலவு குறைக்கலாம் என கூறினார்கள்.
இந்நிகழ்ச்சியில் அட்மா திட்டம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு. செந்தில்குமார் மற்றும் பயிர் காப்பீடு கள அலுவலர் திரு வெங்கடேஷ் மற்றும் முன்னோடி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
