தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், காமராஜ் நகர் பகுதியில் புதிய பகுதி நேர அங்காடி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கட்டுபாட்டில் காரிமங்கலம் வட்டத்தில் 1768 குடும்ப அட்டைகளுடன் இயங்கும் காரிமங்கலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அங்காடியை (TNCSC) பிரித்து காமராஜ் நகர், பகுதியில் 420 குடும்ப அட்டைகளுடன் இயங்கும் வகையில் புதிய பகுதி நேர அங்காடி அமைக்கப்பட்டு, இப்புதிய பகுதி நேர நியாய விலைக்கடையினை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் முன்னிலையில் இன்று திறந்து வைத்தார்கள். இந்த புதிய பகுதி நேர நியாய விலைக்கடை புதன் மற்றும் சனிக்கிழமை ஆகிய 2 நாட்களுக்கு இயங்கும்.
காரிமங்கலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அங்காடியில் 1768 குடும்ப அட்டைகளுடன் இயங்கி வந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அங்காடியில் இருந்து புதிய பகுதி நேர நியாய விலைக்கடையிலிருந்து 420 குடும்ப அட்டைகள் பிரிக்கப்பட்ட பின்னர் காரிமங்கலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அங்காடி 1348 குடும்ப அட்டைகளுடன் திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி / ஞாயிறு கிழமைகளில் இயங்கும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக புதிய பகுதி நேர நியாய விலைக்கடையில் காமராஜ் நகர், கைலாச கவுண்டர்கொட்டாய், ஏரியின் கீழூர், தருமபுரி மெயின் ரோடு, மாரப்ப கவுண்டர்கொட்டாய், ஆர்.எஸ்.வி முருக்கம்பட்டி, மேல் முருக்கம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த மொத்தம் 420 குடும்ப அட்டைகளுடன் புதியதாக திறக்கப்படும் காமராஜ் நகர், புதிய பகுதி நேர அங்காடி புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இயங்க உள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமண்டல மேலாளர் திரு.சரவணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.ஜெயக்குமார், பாலக்கோடு வருவாய் வட்டாட்சியர் திரு.ராஜசேகர், காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் திரு.பி.சி.ஆர். மனோகரன், அரசுத்துறை அலுவலர்கள், நியாய விலைக்கடை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

