Type Here to Get Search Results !

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார் - மாவட்ட ஆட்சியர்.

தருமபுரி மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய கூட்டரங்கில் தடை செய்யப்பட்ட ஒரு முறையே பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை, சேமிப்பு, விநியோகம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான சிறப்பு பணிக்குழுக் (DLSTC) கூட்டம் இன்று (12.08.2022) நடைபெற்றது. இப்பணிக்குழுக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமை வகித்து பேசும்போது தெரிவித்ததாவது: தருமபுரி மாவட்டத்தில் நெகிழி பயன்பாடு இல்லாத நிலையினை உருவாக்குவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். அனைத்துறை தலைவர்களுக்கும் நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய தங்கள் துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையுடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சியில் அன்றாடம் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக தரம் பிரித்து பிளாஸ்டிக் மறுசுழற்சியாளரிடம் வழங்க வேண்டும். மேலும் மருத்துவத்துறையின் மூலம் மாவட்டத்திலுள்ள அரசு தருமபுரி மருத்துவகல்லூரி மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் அன்றாடம் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி பெற்ற பிளாஸ்டிக் மறுசுழற்சியாளரிடம் வழங்கிட வேண்டும். 

மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பையின் பயன்பாட்டினை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்திட வேண்டும். தருமபுரி மாவட்டத்தை நெகிழி இல்லா மாவட்டமாக உருவாக்குவதற்கு அனைத்து அலுவலர்களும் முனைப்புடன் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக, 75வது சுதந்திர தினவிழா அமுதப்பெருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்கள். இதனைதொடர்ந்து, 75 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தேசியக் கொடி மற்றும் மஞ்சப்பையுடன் கூடிய மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தருமபுரி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் முனைவர்.ஆ.சாமுவேல் ராஜ்குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.ஆர்.சுவாமிநாதன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமதி.அ.மாலா உட்பட துறை அலுவலர்கள் மற்றும் பெர்னதெத் அமலா மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies