பின்னர் அரூர் கச்சேரி மேட்டில் உள்ள காமராஜர் சிலை, ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து விட்டு மரியாதை செலுத்தி தொடர் நடை பயணமாக மொரப்பூர் பேருந்து நிலையம் வந்து அடைந்தனர் மொரப்பூர் பேருந்து நிலையத்தில் தேசிய கொடி ஏற்றிவிட்டு பாதயாத்திரை நிறைவு செய்யப்பட்டுள்ளது.
அதன் பிறகு மோடி அரசை கண்டித்தும் விலைவாசி உயர்வு கண்டித்தும் பால் உப்பு தயிர் அரிசி ஜிஎஸ்டி உயர்வைக் கண்டித்தும் பாதயாத்திரை நடத்தப்பட்டது.
நிகழ்வில் அரூர் வட்டாரத் தலைவர் எம் ஆர் வஜ்ரம்,மொரப்பூர் வட்டாரத் தலைவர் பொன். பிரகாசம், கடத்தூர் வட்டார தலைவர் எம் வெங்கடாசலம் ஆகியோர்களின் தலைமையில்மாநில பேச்சாளர் வீர முனிராஜ் முன்னிலையில் அரூர் நகர தலைவர் கணேசன், கம்பைநல்லூர் நகர தலைவர் குமரவேல், எஸ்சி எஸ்டி மாவட்ட தலைவர் வைரவன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் எஸ் சின்னதம்பி, மாவட்ட பொறுப்பாளர்கள் தேசம் சுகுமார், மார்க்ஸ்,கே ஆர் சிவலிங்கம். சி .முத்து மற்றும் மாவட்ட வட்டார நகர ஒன்றிய கிராம நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் எம் ஜி மணி நன்றி கூறினார்.


