பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பறையப்பட்டி கிராமத்தில் அரூர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டத்தில் தேனீ வளர்ப்பு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேனீ வளர்ப்பு முன்னோடி விவசாயி ஜங்காலபட்டியை சேர்ந்த திரு கருணாநிதி அவர்கள் தேனீ வளர்ப்பு தொழில்நுட்பங்களையும் அவருடைய அனுபவங்களையும் விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் ஆண் தேனீ,இரானீ தேனீ, வேலைக்கார தேனீக்கள் பற்றியும், தேன் பெட்டிகள் பராமரிப்பு பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் திரு ஜெயக்குமார் அவர்கள் கூறும்போது விவசாயிகள் அனைவரும் தேனீ வளர்ப்பு செய்தால் அதிக அளவில் அயல்மகரந்த சேர்க்கை நடைபெற்று பயிர் மகசூல் அதிகரிக்கும் என்று விவசாயிகளிடம் எடுத்துக்கூறினார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு செந்தில் குமார், உதவி தொழில் நுட்ப மேலாளர் திரு திருப்பதி மற்றும் 20 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


