![]() |
| Image Credit : Google.com |
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும், கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியதாலும் கர்நாடக அணையிலிருந்து வெளிய உபரி நீரால் சில வாரங்களுக்கு 2 இலட்சம் கன அடிகளுக்கு மேல் நீர் வரத்து ஏற்பட்டு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளப்பெருக்கால் கடந்த 38 நாட்களாக ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் முதல் காவேரியில் நீர்வரத்து படிப்படியாக குறைந்ததால் கடந்த 17ம் தேதி முதல் பரிசல் இயக்க மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.
![]() |
| Image Credit : Google.com |
வெள்ளப்பெருக்கால் புகழ்பெற்ற அருவிகளான மெயின் அருவி மற்றும் சினி அருவி ஆகிய பகுதிகளில் வெள்ளத்தடுப்புகள் சேதமடைந்ததால் தொடர்ந்து குளிப்பதற்க்கான தடை தொடர்ந்து வருகிறது.
வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![]() |
| Image Credit : Google.com |




