அங்கு வீட்டில் கொண்டு வந்த புளி சாதத்தை சாப்பிட்டு, பின்பு பஸ்சை சுத்தம் செய்ய சென்றார். அப்போது தீடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பையர்நத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராமன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக பொம்மிடி காவல் நிலையத்தில் கோவிந்தன் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் பள்ளி நிர்வாகத்திடம் நேரில் விசாரணை மேற்கொண்டார், விசாரணையின்போது அரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பெனாசிர் பாத்திமா தலைமையில் பொம்மிடியிலும், பையர்நத்தத்திலும் போலீசார் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
