தருமபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் கஞ்சா விற்பனை அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் அவர்களின் உத்தரவின் பேரில் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பெல்ரம்பட்டி கட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன் 70 அவரது விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக மாரண்டஅள்ளி காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதை தொடர்ந்து பெல்ரம்பட்டி கட்டுக்கொட்டாய் கிராமத்திற்கு விரைந்து சென்ற மாரண்டஅள்ளி காவல்துறையினர் அங்கு விவசாய நிலத்தில் 10 மேற்பட்ட கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரிய வந்தது உடனடியாக அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
