தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் திம்மப்பன்(45).கூலி தொழிலாளியான இவர் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மகேந்திர மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் மீது விசாரணை நடத்திய போலீசார், போக்சோ மற்றும் எஸ்.சி., எஸ்.டி.வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திம்மப்பனை கைது செய்தனர்.
இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது, இந்த வழக்கு விசாரணை முடிவில் திம்மப்பன் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆனது. எனவே அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு நீதிபதி சையத்பக்ரதுல்லா நேற்று தீர்ப்பளித்தார்.
